GOAT படத்தின் டிரைலருக்கு கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் அரச்சனா கல்பாத்தி விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான மூன்று பாடல்கள் மீது ரசிகர்கள் இடையே சிறு அதிருப்தி இருந்தபோதும் பல லட்ச பார்வைகளை பெற்று பல சாதனைகளைப் படைத்தன.
GOAT திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கி அப்படக்குழு பணியாற்றி வருகிறது.
இதற்கிடையே சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி GOAT படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து இதுவரை வந்த பாடல்கள் போல் இல்லாமல், GOAT டிரைலர் சிறப்பாக வர வேண்டும் என படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை டேக் செய்து சமூகவலைளங்களில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர், “உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம். எனவே தயவுசெய்து அமைதியாக இருங்கள் மற்றும் எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் ❤️🤗 நாளை உங்களுக்கு சரியான தகவலை தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி மறைமுகமாக GOAT டிரைலர் வரும் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆவதை அர்ச்சனா உறுதிபடுத்தியுள்ளார். இதனையடுத்து நடிகர் விஜய் பாணியிலேயே விஜய் ரசிகர்கள் ’வீ ஆர் வெயிட்டிங்’ என மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“யார் அதிக பணிகளை செய்தது” : கோவை ஆத்துபாலம் குறித்த வேலுமணியின் கருத்துக்கு எ.வ.வேலு பதிலடி!
NIRF தரவரிசை 2024 : தேசிய அளவில் IIT மெட்ராஸ், அண்ணா பல்கலை. முதலிடம் : முழு பட்டியல் இதோ!