‘அறமுடைத்த கொம்பு’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை அள்ளிவருவதால், அப்படக்குழு அதிக சந்தோஷத்தில் இருக்கிறது.
மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், ஜாக்சன்ராஜ். இவர், நெல்லை மக்களைக் கருவாகக் கொண்டு அறமுடைத்த கொம்பு என்ற படத்தை எடுத்துள்ளார்.
அதில், அம்மாவட்ட மக்களையே நடிக்கவும் வைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விருதுகளைக் குவித்துவருகிறது. மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற்ற தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில், அறமுடைத்த கொம்பு திரைப்படத்திற்கு அவுட் ஸ்டேன்டிங் அச்சீவ்மென்ட் அவார்டு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சிங்கப்பூரில் நடந்த World film carnival விழாவில் Narrative feature பிரிவில் “அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விருதுகளைப் பெற்றுவருவதால் திரைப்படக் குழு அதிக சந்தோஷத்தில் இருக்கிறதாம்.
இதுகுறித்து இயக்குநர் ஜாக்சன்ராஜ், “மண்சார்ந்த கருவோடு இந்த படத்தை இயக்கியுள்ளேன். முதல் படத்திலேயே விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது” என்கிறார் பெருமகிழ்வுடன்.
ஜெ.பிரகாஷ்
வாம்மா நீ தான் என் தங்கச்சி…வடிவேலுவின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்!