இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

சினிமா

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் ‘மின்மினி’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது ‘மின்மினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015 ஆம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை 7 ஆண்டுகள் காத்திருந்து, தத்ரூபமாக அந்த கதாபாத்திரங்களை திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு ‘மின்மினி’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

இந்நிலையில், ’மின்மினி’ படத்தின் மூலம் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாவதாக ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று(ஜூன் 12 ) ஹலிதா ஷமீம் , வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மின்மினி படத்துக்காக திறமைமிக்க கதீஜா ரகுமானுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. சிறந்த பாடகி மட்டுமல்ல, இவர் சிறந்த இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை வந்துகொண்டிருக்கிறது என குறிப்பிட்டு, கதீஜா உடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஹலிதா. தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கதீஜா ரஹ்மான் ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ’எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியையும், சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வாழ்த்திய முதல்வர்!

’பிரதமர்‌ மோடி மீது அமித்ஷாவிற்கு கோபமா?’: முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *