மஹிந்த்ரா SUV க்குள் மயக்கப் போகும் ஏ.ஆர்.ரகுமான்

சினிமா

மஹிந்த்ரா நிறுவனம் விரைவில் பிஇ 05 என்ற எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது .இந்த கார் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த கார் வெளிப்படுத்தும் ஒலிக் குறிப்புகள் எல்லாம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள மஹிந்த்ரா நிறுவனத்தில் சில மணி நேரங்கள் ஏ.ஆர். ரஹ்மான் செலவிட்டு பலவற்றை ஆராய்ந்து வித்தியாசமான ஒலி அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.

பொதுவாக கார் உருவாக்கப்படும் போது, அதற்கான சவுண்ட் சிஸ்டங்களை வடிவமைப்பதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது. சவுண்ட் சிஸ்டங்கள் என்றால் காரில் உள்ள ஸ்பீக்கர்கள் மட்டுமல்ல இண்டிகேட்டர் போடும்போது எழுப்பப்படும் ஒலி, ஹாரன் ஒலி,  காருக்குள் செய்யப்படும் அறிவிப்புகள், காருக்குள் உள்ள பட்டன்களை அழுத்தும் போது ஏற்படும்  ஒலி… இப்படியாக எங்கெல்லாம் சவுண்ட் வர வேண்டுமா அதையெல்லாம் செய்ய வேண்டியதும் கார் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை.

இந்த முறை மஹிந்த்ரா நிறுவனம் இந்த பிஇ 05 காருக்கான ஒலித் துணுக்குகளை  வடிவமைக்கும் பொறுப்பை பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் வழங்கியுள்ளது. இனி அவரால் உருவாக்கப்படும் ஒலி  இந்த கார்களில் இடம் பெறும். இதற்காக , இந்த காரில் டால்பி அட்மாஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்படுகிறது. முன்னதாக இதற்காக லே சலாங்க் என்ற தீம் சாங்கையும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4.3மீட்டர் நீளம் 1. 9 மீட்டர் அகலம் 1.6 மீட்டர் உயரம் கொண்ட  BE.05 ரக கார் அடுத்த வருடம் ஜனவரி மாதம் சந்தையில் அறிமுகமாகிறது. ஏ.ஆர். ரஹ்மானால் உருவாக்கப்படும் இசையால் பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த காருக்காக 75 வித்தியாசமான ஒலிக்குறிப்புகளை  ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இதன் காரணமாக  அவரின், ரசிகர்கள் இந்த காரின் அறிமுகத்துக்காக காத்திருக்கின்றனர்.

காருக்குள் ரகுமான் பாட்டு கேட்ட காலம் போக… காரே ரகுமான் இசையைதான் பாடப் போகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!

பிக் பாஸ் சீசன் 8 : ’என் இடுப்ப தொட்டா ஃபேன்ஸ் கோவிச்சிப்பாங்க!’ – தர்ஷா குப்தா

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *