பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ. ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் இசைப் பணிகள் குறித்துப் பேசியுள்ளார்.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக இந்த மாதம் இறுதியில் (செப்டம்பர் 30) வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள், நடிகையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் பணியின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“இந்த ஆடியோ லாஞ்ச் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானது. பொன்னியின் செல்வன் நமது பாரம்பரியம், நமது கலாச்சாரம். இதை நிறையப் பேர் படமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால் மணி சார் அதனை எடுத்து முடித்துள்ளார். இந்த குழுவிற்கு என்னுடைய நன்றி, ரசிகர்கள் ஆதரிப்பதற்கு நன்றி.
இந்த படத்திற்கு 10 வருடத்திற்கு முன்பு இசையமைக்க ஆரம்பித்தோம். முதலில் ஆரம்பித்து பிறகு நின்றுவிட்டது. பல விதமான இசையை வடிவமைத்து முடிவு செய்யப்பட்டது.
பொன்னியின் செல்வன் ஒரு டிரீம் புராஜெக்ட். தற்போதைய சினிமா துறைக்கு ஏற்றவாறு நமது பாரம்பரியத்தைக் கொண்டு இசை மற்றும் முழு படமும் உருவாக்கப்பட்டுள்ளது. நம் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட படம், கண்டிப்பாகச் சிறப்பாகத் தான் இருக்கும்” என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.
மோனிஷா
பொன்னியின் செல்வன்: கைப்பற்றிய சன்-அதிருப்தியில் கலைஞர்!