ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் ஏ.ஆர்.ரகுமான்

Published On:

| By christopher

AR Rahman seeks compensation of Rs 10 crore

தமிழ் சினிமா ரசிகர்களால் இசை புயல் என்று கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, அவ்வப்போது வெளிநாடுகளில் இசை கச்சேரி நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிகர்களை தனது மியூசிக் மேஜிக்கினால் வசீகரித்து வருகிறார்.

தொடர்ந்து வெளிநாடுகளில் மட்டுமே இசைக் கச்சேரி நடத்தி வந்த ஏ.ஆர். ரகுமானை தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் இசைக் கச்சேரி நடத்துமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ரசிகர்களின் இந்த வேண்டுகோளுக்கு “permissions, permissions, permissions 6 months process…” என தனது எக்ஸ் பக்கத்தில் ரிப்ளை மூலம் thug life செய்தார்.

சர்ச்சையில் முடிந்த கச்சேரி!

இதையெல்லாம் கடந்து ஒரு வழியாக ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி நிகழ்ச்சி சென்னையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி டிக்கெட் விற்பனை தொடங்கியது. டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்த பிறகு மழை காரணமாக அந்த இசை கச்சேரி தள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி அந்த இசை நிகழ்ச்சி அரங்கேறியது. ஆனால் ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரியை ஏற்பாடு செய்த நிறுவனம் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என ரசிகர்கள் கொந்தளித்தது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இரண்டு மூன்று நாட்கள் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்ட ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரி செய்திகள் சில தினங்களுக்கு முன்புதான் ஓய்ந்தது.

முன்பண திருப்பி தராமல் மோசடி!

இந்நிலையில் தற்போது மீண்டும் ஏ.ஆர். ரகுமான் தொடர்பான ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. ஒரு நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு பணம் கொடுத்தோம் ஆனால் நிகழ்ச்சி ரத்தான பிறகு ஏ.ஆர். ரகுமான் பணத்தை திரும்பத் தரவில்லை என்று ஒரு குரூப் ரகுமானின் மீது குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பிற்காக ஒரு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்ததாம். அந்த விழாவில் ஏ. ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ29.50 லட்சம் முன் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் அனுமதி கிடைக்காததால் அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாம். அந்த முன் பணத்தை திருப்பி கேட்ட போது ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் முன் தேதியிட்ட காசோலை வழங்கியதாகவும் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது அந்த அக்கவுண்டில் பணம் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

மேலும் முன் பணத்தை திருப்பித் தருமாறு ஏ.ஆர்.ரகுமான் தரப்பிடம் கேட்டபோது சரியான பதில் எதுவும் அளிக்கவில்லை என சென்னை போலீஸ் ஆணையரகத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் எதிர் நோட்டீஸ்!

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்திற்கு ஏ.ஆர். ரகுமான் தரப்பிலிருந்து எதிர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டிஸில் இசை நிகழ்ச்சிக்கு வாங்கிய முன் பணத்தை திரும்பத் தரவில்லை என பொய்யாக கூறி ஏ. ஆர்.ரகுமான் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, ஏ.ஆர்.ரகுமான் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் அடுத்த 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் தர வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமையல் சிலிண்டர் விலை மேலும் குறைப்பு!

விஜய் சேதுபதி – கத்ரீனா பட ரீலீஸ் தேதி மாற்றம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel