இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி (இன்று) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அதே போன்று இன்றைய தினத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று முக்கிய கோரிக்கையினை வைத்துள்ளார்.
அதில், “நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் – நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள்.
நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும்.
ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி: வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம்.
இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்.
இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்” என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆதவ் ஆர்ஜூனா – லாட்டரி மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!
பட்டத்தை துறந்த கமல் : திமுகவை விமர்சித்த தமிழிசை… முரளி அப்பாஸ் கண்டனம்!