பிரபல பாடகர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியை பிரிந்தார். அப்போது, இது பெரும் விவாத பொருளாகியது. பலரும் பல விதமான கருத்துக்களை இணையத்தில் பேசி வந்தனர். தற்போது, இந்த விவகாரம் முற்று பெற்றுள்ள நிலையில் பிரபல இந்தி பாடகர் ஏ.ஆர் ரஹ்மான் பற்றி அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
நீண்ட காலமாக ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியுள்ள சோனு நிகம் O2 இந்தியாவிடத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தாவூத் படத்தில் முதன் முதலாக அவருடன் பணியாற்றினேன். வழக்கமாக இசையமைப்பாளர்கள் பல அறிவுரைகள் பாடல் பதிவின் போது வழங்குவார்கள். மாற்றி படிக்க கூறுவார்கள். ஆனால், ரஹ்மான் என் விருப்பப்படி பாட அனுமதித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதே வேளையில், அவர் யாருடன் டீப்பாக பழக மாட்டார். உறவு முறைகளுக்குள் அடங்க மாட்டார். யாரையும் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள மாட்டார். தன்னை பற்றியும் எதுவும் பகிர்ந்து கொள்ள மாட்டார். ஒரு வேளை திலீப் குமார் என்ற பழைய பெயர் இருந்த போது இருந்த பழைய நண்பர்களுடன் ஜோவியலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ரஹ்மான் ஃப்ரெண்டிலியான மனிதர் இல்லை. அவருக்கு வேலை மட்டும்தான் முக்கியம்.
அமெரிக்காவில் அவருடன் இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். நாங்களெல்லாம் ஒருவருக்கொருவர் பேசி சிரித்து ஜாலியாக இருப்போம். ஆனால், அவர் என்னை பற்றியோ அல்லது யாரை பற்றியோ எதுவும் கேட்டு தெரிந்து கொண்டதில்லை. அவருக்கு மற்றவர்களை பற்றி புறம் பேசவும் தெரியாது. அது அவருடைய குறை என்று சொல்லவில்லை. இதுதான் ஏ.ஆர். ரஹ்மான். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான மனிதர் அவர். அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர். யார் மனதையும் புண்படுத்த மாட்டார். தனது இசை. தனது பிரார்த்தனை. இதுதான் அவரின் வாழ்க்கையாக உள்ளது. ஆனால், யாரையும் தன்னிடத்தில் நெருங்க விட மாட்டார்.
இவ்வாறு சோனு நிகம் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
2 சப்பாத்தி, காய்கறி : திருடர்களுடன் அடைக்கப்பட்ட ரூ. 2,500 கோடி அதிபதி!
பாட பயந்து ஸ்டூடியோவில் இருந்து தப்பிய ஜெயச்சந்திரன்: பிடித்து வந்து பாட வைத்த தயாரிப்பாளர்!