மாமன்னன் படத்தில் இருந்து இன்று (மே 27) வெளியாகியுள்ள ஜிகு ஜிகு ரயில் பாடலின் லிரிக் வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடியபடி ஸ்டைலாக ஆடியுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடித்துள்ள திரைப்படமான ‘மாமன்னன்’ வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது. இதனை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்,
இப்படத்தில் உதயநிதிஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பஹத் பாசில் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் வடிவேலு குரலில் வெளியான ’ராசா கண்ணு’ பாடல் பலரையும் உருக வைத்தது.
அதனையடுத்து மாமன்னன் படத்தில் இருந்து ’ஜிகு ஜிகு ரயில்’ என்ற இரண்டாவது சிங்கிள் இன்று காலை வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் யுகபாரதி வரிகளில் அமைந்துள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி உள்ளார்.
எப்போதும் பாடுவதோடு நிறுத்திவிடும் ஏ.ஆர்.ரகுமான், இந்த பாடலை பாடியதோடு மட்டுமின்றி சிறுவர்களுடன் சேர்ந்து நடனமும் ஆடி இருக்கிறார்.
சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ள நிலையில், கூலிங் கிளாஸ் ஹூடி டிசர்ட்டு அணிந்தபடி ’எல்லாம் மாறும் எல்லாம் மாறும் உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்’ என்று ஏ.ஆர். ரகுமான் ஸ்டைலாக ஆடுவது தற்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜப்பானில் கோமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
மோடி தலைமையில் நிதி ஆயோக்: ஆந்திரா தவிர தென்னிந்திய முதல்வர்கள் ஆப்சென்ட்!