நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை இன்று (அக்டோபர் 1) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று காலை ஐந்து மணிக்கு ரத்தநாளத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டது. ரஜினிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மின்னம்பலத்தில் இன்று காலை ரஜினியின் தொடையை திறந்து – அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட் மற்றும் அப்பல்லோ சிசியு பெட் நம்பர் 61-ல் ரஜினி – ஹெல்த் அப்டேட் என்ற தலைப்புகளில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், ரஜினியின் ஹெல்த் அப்டேட் குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” செப்டம்பர் 30 அன்று சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்கத்தீடர் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. மூத்த இதயநோய் நிபுணர் சாய் சதீஷ் இதை சரிசெய்வதற்காக ரத்தநாளத்தில் ஸ்டன்ட் பொருத்தினார்.
ரஜினி தற்போது நலமுடன் இருக்கிறார் என்பதை அவரது ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடி மீது பறந்து வந்து விழுந்த செல்போன்… அவேசமடைந்த அதிமுகவினர்!
செப்டம்பர் மாசத்துல இத்தனை லட்சம் பேர் மெட்ரோ பயணமா?