திருச்சூரில் இருந்து தேசிய விருது வரை- வாழ்த்து மழையில் அபர்ணா முரளி 

 சூரரைப் போற்று படத்தில் சூரியாவுடன் இணைந்து நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி,  சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்.  சூரரைப் போற்று படம் குவித்த ஐந்து விருதுகளில் ஒன்று அபர்ணா பாலமுரளிக்கானது.

கேரளாவின் திருச்சூரைச்  சேர்ந்த சேச்சியான  அபர்ணா பாலமுரளி நடிகையாகவும்,  பாடகியாகவும் அறியப்பட்டவர்.  அபர்ணாவின் தந்தை பாலமுரளி பல இசை ஆல்பங்களை வெளியிட்ட இசைக் கலைஞர். அவரது தாயார் ஷோபனா வழக்கறிஞர். 

தனது 18 ஆவது வயதில் மலையாள திரைப்படமான  யாத்ரா துடர்னு  விருதில்தான் அறிமுகமானார்.  2013 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணத்தில்  2015 ஆம் ஆண்டு  ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

தொடர்ந்து மலையாளப் படங்களிலேயே நடித்து வந்த அபர்ணா பாலமுரளி தமிழுக்கு வந்தது 2017 ஆம் ஆண்டுதான். எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமாக தமிழுக்கு வந்த அபர்ணா, அதன் பின்  2019 ஆம் ஆண்டு சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரோடு இணைந்து நடித்தார். 

இப்படி தமிழும் மலையாளமும் என நடந்துகொண்டிருந்த அபர்ணாவின் திரைப்பயணத்தில்…  2020 ஆம் ஆண்டு சூரியாவோடு இணைந்து சூரரைப் போற்று படத்தில்  அபர்ணா நடித்த பொம்மி பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சூரரைப் போற்று படம் அபர்ணாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து தீதும் நன்றும், வீட்ல விசேஷம் படங்களிலும் நடித்துள்ளார் அபர்ணா முரளி.

நடிப்பு, இசை மட்டுமல்ல பரத நாட்டியம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் போன்ற கலைகளையும் கற்று தேர்ந்தவர் அபர்ணா பாலமுரளி.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. 

குறிப்பாக பொம்மி பொம்மி என்று அவரை  சமூக தளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வேந்தன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts