நடிகை அபர்ணா பாலமுரளியிடம் சட்டக் கல்லூரி மாணவர் விஷ்ணு அத்துமீறிய நிலையில், அந்தக் கல்லூரியின் மாணவர் சங்கம் சார்பில் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஷ்ணு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
தமிழில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசன் உடன் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் , இந்த பட தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.
விழா தொடங்கிய சிறிது நேரத்தில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் விஷ்ணு, அபர்ணா பாலமுரளிக்கு சிறிய பூங்கொத்து கொடுத்துவிட்டு, அவர் மீது அத்துமீறி கையைப் போட்டு சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா, அதிர்ச்சியில் அந்த மாணவரிடமிருந்து விலகிச் சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில், இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரான விஷ்ணு தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்தார்.
ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் மாணவர் விஷ்ணுவை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது .
மு.வா.ஜெகதீஸ் குமார்
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!
“நல்லாட்சியின் அடையாளம்” – ரோஸ்கார் மேளாவில் மோடி பேச்சு!