பா.ரஞ்சித்தை கட்டியணைத்த அனுராக் காஷ்யப்: ஏன் தெரியுமா?

சினிமா

மும்பையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வாழ்த்தினார்.

anurag kashyap appreciate

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட்  31-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் காதல் குறித்தும், சாதி ஆணவ கொலைகள், பால் புதுமையினர் குறித்தும் பேசியுள்ளது. சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் வெளியாகி நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.

anurag kashyap appreciate

இந்தநிலையில், படக்குழுவினர் தற்போது படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவுக்குச் சென்ற நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவினருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மும்பை சென்ற, நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவினர் பாலிவுட் திரைக் கலைஞர்களுக்கான சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். இதில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், நீரஜ் காய்வாம் உள்ளிட்டோர் நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பார்த்தனர்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் இயக்குனர் அனுராக் காஷ்யப் நெகிழ்ச்சியுடன் பா.ரஞ்சித்தை கட்டியணைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை படக்குழுவினர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதனால் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

செல்வம்

”பெண்ணும் பெண்ணும் காதலிக்க கூடாதா?”: நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.