சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘ அண்டே சுந்தரனிகி ‘ திரைப்படத்தின் தோல்விக்கு தானே காரணம் என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் புது முயற்சிகள் செய்வதற்கும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதற்கும் பெயர் போனவர் நடிகர் நானி. தொடர்ச்சியாக வாரிசு கதாநாயகர்கள் இருந்து வரும் தெலுங்கு சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாது தன் திறமையை நிரூபித்தவர் நானி.
இந்த நிலையில், அவர் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ அண்டே சுந்தரனிகி’ படம் வசூல் ரீதியாக தோல்விப் படமானது. அதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில், “அந்தப் படத்திற்கு நான் ஒரு தவறான தேர்வு. மிக சிறப்பாக எழுதப்பட்ட அந்தப் படத்தை ஒரு சினிமா ரசிகனாக நான் தேர்ந்தெடுத்து விட்டேன். ஆனால், என் ரசிகர்கள் நான் இருப்பதால் அதை ஒரு ஸ்டார் படமாகவே எதிர்பார்த்தனர். நான் எனது இமேஜை பற்றி சிந்திக்கத் தவறிவிட்டேன்.
இப்படி ஒரு படத்தைப் பற்றி முன் கூட்டியே ஒரு எதிர்பார்ப்புடன் அதை அணுகினால், அதை முழுதாக ரசிக்க முடியாது. ஆனால், அந்தத் திரைப்படம் என் திரைவாழ்வில் முக்கிய திரைப்படமாக எப்போதும் இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.
இது இப்படி இருக்க, நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’ வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, பிரியங்கா அருள் மோகன் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!
போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தேசிய பணிக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்!