நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிக்கும் “தக்லைஃப்” படத்தில் கூடுதலாக ஒரு நடிகர் இணைந்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் “தக்லைஃப்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமல், சிம்பு, நாசர், அபிராமி உள்ளிட பல திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், “தக்லைஃப்” படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல இந்தி நடிகரான ரோஹித் சராஃப் “தக்லைஃப்” படத்தில் நடிக்கிறார் என்பது தான் அந்த தகவல். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராகுல் நடித்துள்ளாராம்.
90ஸ் கிட்டான ராகுல் சராஃப் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த முகம் தான். கயல் ஆனந்தி நடித்த “கமலி ஃபிரம் நடுக்காவேரி” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராகுல். அதன்பின்னர் “தக்லைஃப்” படத்தில் தான் ராகுல் நடிக்கிறார்.
மணிரத்னம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது நம் கெரியருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என இந்தி நடிகர், நடிகைகள் நம்புகிறார்கள். இந்நிலையில் தான் மணிரத்னத்திடம் இருந்து போன் வந்ததும் ராகுல் உடனே ஃபிளைட்டை பிடித்து சென்னைக்கு வந்துவிட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் “தக்லைஃப்” படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. “தக்லைஃப்” படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை சேர்ந்து தயாரித்து வருகின்றன.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸுடன் சேர்ந்து கமல் நடித்த “கல்கி 2898ஏடி” படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.
படம் பார்க்கும் அனைவரும் கமல் கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டு போகிறார்கள். கல்கி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களாக வந்து கொண்டிருக்கிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாமக எம்.எல்.ஏ.வின் கோரிக்கை : உடனே ஏற்ற முதல்வர்!
ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டங்கள்: உதயநிதி அறிவிப்பு!