அனிதா சம்பத்துக்கு அடித்த ஜாக்பாட்… என்னன்னு நீங்களே பாருங்க..!

Published On:

| By Manjula

செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி பற்றிய ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தவர் அனிதா சம்பத். தனது துணிச்சலான பேச்சின் மூலம் நடிகர் கமல்ஹாசனின் பாராட்டுகளை பெற்றார்.

பொதுவாகவே பிக்பாஸ்க்கு சென்ற பல பிரபலங்கள் தங்கள் பெயரை எடுத்துக் கொள்கின்றனர். அதில் இருந்து மீண்டு வரவே அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த விஷயத்தில் அனிதா சற்றே வித்தியாசமானவர்.

தன்னைப் பற்றிய கமெண்ட்களை கண்டுகொள்ளாமல் தனது கேரியரில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தனது செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீங்கினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அனிதா சம்பத் அதன் பிறகு பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கு பெற்றார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்நிலையில் விஜய் டிவி புதிய நிகழ்ச்சி ஒன்றை அனிதா தொகுத்து வழங்கவிருக்கிறார். ‘முதல் வணக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி காலைப் பொழுதில் ஒளிபரப்பாக இருக்கிறது.

அனிதா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் பேட்டிகள், மருத்துவம், ஆன்மீகம், ஜோதிடம் போன்ற பல்வேறு விஷயங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது!

நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்…

லிங்க்-ஐ அழுத்தினால் ரூ. 500? : பாஜகவிற்கு எதிராக திமுக புகார்!