‘அனிமல்’: பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு?

Published On:

| By Selvam

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி டியோல் ஆகியோர் நடிப்பில், அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் தயாரான திரைப்படம் ‘அனிமல்’. இந்த திரைப்படம், கடந்த டிசம்பர் 1 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ரத்தம் தெறிக்க தெறிக்க, அப்பா – மகன் உறவை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக தயாராகியுள்ள இந்த படம், ஒரு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், அதே நேரம் இப்படங்களில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்தும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி சித்தரிப்புகள் குறித்தும் மற்றொரு தரப்பினரிடையே கடும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

இப்படி கலவையான விமர்சனத்தை இந்த ‘அனிமல்’ திரைப்படம் பெற்றிருந்தாலும், அது இப்படத்தின் வசூலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு உதாரணமாக, முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.116 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

முதல் நாளை விட 2வது நாளில் அதிக வசூலை ஈட்டிய இந்த ‘அனிமல்’ திரைப்படம், 2 நாட்களில் உலக அளவில் ரூ.236 கோடி வசூலை கடந்தது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் 3 நாட்கள் வசூல் குறித்த விவரத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அனிமல்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் ரூ.356 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும், Comscore நிறுவனம் வெளியிட்ட, கடந்த வாரத்தில் உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் பட்டியலில், நெப்போலியன், ஹங்கர் கேம்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி, இந்த ‘அனிமல்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

முரளி

கார்த்தியின் ‘ஜப்பான்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த 6 மணி நேரத்தில் சென்னையில் மழை குறையும்: பாலச்சந்திரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…