அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி, இந்தியா முழுக்க பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ஹிந்தியில் “அனிமல்” என்ற படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓர் ஆக்ரோஷமான இளைஞராக, அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் நடித்திருப்பது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரன் டைம் குறித்த செம அப்டேட் வெளியாகி உள்ளது.
அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் அனிமல் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் 23 வினாடிகள் & 16 ஃபிரேமஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு 3 மணி நேரத்திற்கு மேல் ரன் டைம் கொண்ட படமாக “அனிமல்” வெளியாக உள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Will there be 2 interval?
— Arjun Mahakshaya a.k.a MAX (@iamgopi118) November 22, 2023
தற்போதைய சூழ்நிலையில் 2.30 மணி நேர படங்களையே ‘ஏன் இவ்வளவு நேரம்?’ என்ற மோடில் ரசிகர்கள் பார்த்துவரும் நிலையில், சுமார் மூன்றரை மணி நேரம் கொண்ட இப்படத்தை ரசிகர்கள் எப்படி பொறுமையுடன் பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை அவரிடமே நேரடியாக ரசிகர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். மேலும் படத்திற்கு அப்போ 2 இண்டர்வெல் இருக்குமா? என்றும் கேள்வி கேட்டுள்ளனர்.
https://twitter.com/AwaaraHoon/status/1727306048456065401
எப்படி இருந்தாலும், திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கும்படி அமைந்துவிட்டால், நேரம் ஒரு பொருட்டாக இருக்காது என்று இயக்குநருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 01 ஆம் தேதி அனிமல் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா
வெளக்கம் வியாக்யானம் வெளக்கமாறு: அப்டேட் குமாரு
தனுஷ் குரலில் வைரலாகும் ‘கில்லர் கில்லர்’ பாடல்!