அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “அனிமல்”. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
A சான்றிதழுடன் வெளியான அனிமல் படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் 23 வினாடிகள். தனது தந்தை மீது வைத்துள்ள பாசத்திற்காக எதிரிகளை தேடித்தேடி கொல்கிறார் ஹீரோ (ரன்பீர் கபூர்).
படம் முழுக்கவே வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் ரன்பீர் கபூர்.
டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான அனிமல் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 116 கோடி ரூபாய் என்றும், ஹிந்தி சினிமா வரலாற்றில் விழா காலங்கள் இல்லாத நாட்களில் வெளியாகி அதிக வசூல் செய்துள்ள படம் அனிமல் தான் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் அனிமலின் வசூல் வேட்டை தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத்துறை அதிகாரி கைது: அண்ணாமலை ரியாக்ஷன்!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்