‘அங்காரகன்’ : இசையமைப்பாளராகும் பாடலாசிரியர் கார்த்திக்

Published On:

| By Kavi

விஜய், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியரான கு.கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சத்யராஜ் கதை நாயகனாக நடித்திருக்கும் அங்காரகன் படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாள நடிகை நியா மற்றும் மும்பையை சேர்ந்த மாடலான ரெய்னா காரத் இந்த படத்தின் மூலம் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகின்றனர்.

மலையாளத்தில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்கிற படத்தில் கதாநாயகியாக நியா நடித்திருந்தார்.

மேலும் ரோஷன், தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், டி.காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி பாராட்டு பெற்ற ‘கருந்தேள்’ ராஜேஷ் இந்தப் படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார்.

உதித் நாராயணன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்தப் படத்தின் இசை ஆல்பம் இன்று (29.03.2023) ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படுகிறது.

இராமானுஜம்

வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உக்ரைனில் படித்த இந்திய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி!

போலி மருந்து தயாரிப்பு: 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share