திகட்ட திகட்ட பாடலில் நா.முத்துக்குமாரின் திகட்டாத வரிகள்!

சினிமா

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அநீதி’ படத்தின் முதல் பாடலான ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ பாடல் இன்று (நவம்பர் 1) வெளியானது.

’வெயில்’, ’அங்காடித் தெரு’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவருடைய இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம், ’அநீதி’. இப்படத்தில், ’கைதி’, ’மாஸ்டர்’ படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதையின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம், அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இப்படத்துக்கு எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதசி ஆகியோர் எழுதியுள்ளனர்.

இதில், மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நினைவாக அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டு, ஒரு பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் உருவான பாடல் இன்று (நவம்பர் 1) வெளியானது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் பாடியிருக்கிறார்.

மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம், நா.முத்துக்குமார் மீண்டும் பல உள்ளங்களை தன்னுடைய வைர வரிகளால் கட்டிப்போட்டிருக்கிறார்.

’மழையில் வெயில் வாசம் கலந்து மார்பினில் ஊறுகிறாய்
மாயக்கதவின் பின்னிருந்து காதல் கனவினைப் பேசுகிறாய்’
என்ற வரிகள் அனைத்து இதயங்களையும் மயக்கவைக்கிறது; இந்த மழைக்காலத்திற்கு மகுடம் சேர்க்கிறது.

ஜெ.பிரகாஷ்

இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும்: சீமான்

ராமஜெயம் கொலை வழக்கு: நிர்மலா சீதாராமன் தலையீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *