நயன்தாரா கதைநாயகியாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம்.
சமூக பொறுப்பின்மை, அரசியல்வாதிகள், அரசாங்க நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை சமரசமின்றி பதிவு செய்திருந்த அறம் படத்தின் வெற்றி இயக்குநர் கோபி நயினாரை பிரபலமாக்கியது.
அதனை தொடர்ந்து அவர் இயக்கும் இரண்டாவது படமான ‘மனுசி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘மனுசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வணிகம் சார்ந்த மசாலா கதாபாத்திரங்களை தவிர்த்து சமூகம், தனி மனித பிரச்சினைகளை பேசுகின்ற திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஆன்ட்ரியா குறிப்பிடத்தக்கவர்.
‘அனல் மேலே பனித்துளி’ படத்திற்கு பிறகு ஆன்ட்ரியா நடிக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி (21.12.2022) படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
பூட்டப்பட்ட ஓர் அறையிலிருந்து கதவின் வழியே நடிகை ஆன்ட்ரியா பார்க்கும் வகையிலும், அதே அறையில் ஆண் ஒருவரின் முன்னால் அவர் அமர்ந்திருக்கும் வகையிலும் இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. பார்வையாளர்கள் மத்தியில் இந்த இரண்டு போஸ்டர்களும் அழுத்தமான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமானுஜம்
நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்!
சென்னையில் உறைய வைக்கும் பனி: வாகன ஓட்டிகள் அவதி!