கவின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக, நடிகை ஆண்ட்ரியா நடிக்கவிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவின் நடிப்பில் அடுத்ததாக ஸ்டார் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளின் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்று வருகிறது.
பாடலாசிரியர் கபிலன் எழுதிய இப்பாடலை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். பாடல் வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகிறது.
ஸ்டார் படத்திற்கு அடுத்ததாக கவின் நடிப்பில் கிஸ் படம் வெளியாகவிருக்கிறது. இதற்கு அடுத்து அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக்கின் படத்தில் கவின் நடிக்க இருக்கிறார். இப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
இந்தநிலையில் இப்படத்தில் வில்லியாக நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவை பொறுத்தவரை பின்னணி பாடகி, நடிகை என இரண்டிலும் ஆண்ட்ரியா ஜொலித்து வருகிறார்.
தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக்கொள்வதால், ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தநிலையில் விக்ரணன் அசோக் – கவின் படத்தில் ஆண்ட்ரியா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடலாம். கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆண்ட்ரியா இளம்நாயகன் கவினுடன் நடிக்க உள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOLD RATE: லேசாக குறைந்த விலை… எல்லாமே கண் துடைப்பு தான்!
அரசு வாகனங்களில் பணம்… தொழிலதிபர்களிடம் மிரட்டல் : செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் அதிர்ச்சி!
ஏப்ரல் 9ல் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி