எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்: ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!

சினிமா

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தரை காசுக்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரம் மன உறுதியுடன் பொறுமையாக அதை இருவரும் கடந்து சென்றனர்.

இவர்களது திருமணம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையிலும், இவர்கள் இன்னமும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜோடியாகவே உள்ளனர். இவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் தாங்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை இவர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். தங்களின் சுக துக்கங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தை பூசத்தையொட்டி இன்று (பிப்ரவரி 5 ) இருவரும் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கோயிலின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களின் இன்ஸ்டாகிராமில் இருவரும் பகிர்ந்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் “நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டும் இல்லை எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் வேண்டி கொண்டோம். முருகன் இருக்க பயம் ஏன்” என்று கூறியுள்ளனர்.

தற்போது சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மகாலட்சுமி இவர் விரைவில் சின்னத்திரை சீரியல்களை தயாரிக்கவுள்ளதாகவும் ரவீந்தருக்கு அவரது தயாரிப்புப் பணிகளில் உதவி செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

துர்கா ஸ்டாலின் சகோதரி மரணம்: இன்று மாலை இறுதிச்சடங்கு

கோலி – ரோகித் இடையேயான விரிசல் உண்மை தான்: பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *