”நாட்டு நாட்டு” பாடலின் பேமஸான ஹூக் ஸ்டெப்பை நடிகர் ராம்சரணிடம் இருந்து ஆனந்த் மஹிந்திரா கற்றுக்கொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் ’ஆஸ்கர்’ விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் ’கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது. நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி அந்த விருதை பெற்றார்.
இதனிடையே ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரணை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவரிடம் ’நாட்டு நாட்டு’ பாடலின் பேமஸான ஹூக் ஸ்டெப்பை எவ்வாறு ஆட வேண்டும் என்று கற்றுக்கொண்டார்.
இதுகுறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, நாட்டு நாட்டு பாடல் ஸ்டெப்பை கற்றுத்தந்ததற்கு நன்றி ராம்சரண். ஆஸ்கர் வெல்ல வாழ்த்துக்கள் நண்பா” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவுக்கு நடிகர் ராம்சரணும் ரிப்ளை செய்துள்ளார். அதில், ’’ஆனந்த் ஜி நீங்கள் என்னைவிட அந்த நடன அசைவுகளை வேகமாக செய்தீர்கள். உங்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி’’ என பதிவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணங்களை அடுக்கிய முன்னாள் கேப்டன்!
கடலூர்: அதிகாலையில் கோர விபத்து!