’புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் நடித்தபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது மேலும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது.
பாலிவுட்டின் ‛பிக் பி’ என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி, ரியாலிட்டி ஷோ, விளம்பரங்களிலும் அசத்தி வருகிறார்.
தற்போது பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியா படமான ‛புரொஜெக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
’புராஜெக்ட் கே’ திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இதில் அமிதாப் பச்சனும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இதில் அமிதாப் பச்சன் நடிக்கும் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது வலைதள பிளாக்கில் கூறியிருப்பதாவது :
‛‛ ‛புரொஜெக்ட் கே’ படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் எனது விலா எலும்பு உடைந்தது. ஐதராபாத் ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு இப்போது எனது வீட்டில் ஓய்வில் உள்ளேன்.
வலி இருக்கிறது. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும். தற்போது நான் எனது ஜல்சாவில் உள்ள வீட்டில் ஓய்வெடுக்கிறேன்.
எனது நலம் விரும்பிகளை சந்திக்க முடியாது. ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் கூட்டம் சேர வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று கூறியுள்ளார்,.
அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக ’புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்…வதந்’தீ’ அணையட்டும் : வைரமுத்து
பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்!