ameer paruthiveeran censor certificate

ஸ்டூடியோ கிரீன் பேரே இல்ல?… வைரலாகும் பருத்திவீரன் சென்சார் சர்டிபிகேட்!

பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பருத்திவீரன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் சுல்தான் இடையிலான மோதல் நாளுக்குநாள் முற்றிக்கொண்டே செல்கிறது.

அமீர் குறித்த பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அறிக்கை வெளியிட, பதிலுக்கு மன்னிப்பு கேளுங்க என தமிழ் திரையுலகில் இருந்து சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், சிநேகன், நந்தா பெரியசாமி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில் தயாரிப்பு நிறுவனம் என்னும் இடத்தில் அமீரின் டீம் வொர்க் ப்ரொடக்ஷன் ஹவுஸ் பெயர் இடம் பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் பெயர் அதில் இடம் பெறவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் இந்த படத்துல வேற என்னெல்லாம் நடந்திருக்குன்னு தெரியலையே? என தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானால் ஒரு பேச்சா?: ராமதாஸ் கண்டனம்!

திடீரென ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் காரணம் என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts