விருதுகள் நன்றாக நடிப்பவர்களுக்கு கிடைக்காத காரணத்தினால் அவற்றின் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என்று நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் கேரளா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பிகா கூறுகையில், ”நடிகையும், எனது சகோதரியுமான ராதாவுக்கு முதல் மரியாதை படத்துக்காக விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. அதே போல, மன கணக்கு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ராதாவுக்கு விருது கிடைக்கும் என்று கருதினேன். அப்போதும், கிடைக்கவில்லை. இதனால், எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை” என்கிறார்.
மேலும், தன்னுடன் நடித்த நடிகர்கள் பற்றி சில கருத்துகளை அம்பிகா கூறியுள்ளார். அது என்னவென்று பார்ப்போம்.
பிரேம் நசீர்- அழகு, எனது கனவு கண்ணன்
ஜெயன் – நல்ல மனிதர், அவருடன் இரு படங்களில் நடித்துள்ளேன். எனக்கு ஹீரேவாக நடித்து கொண்டிருந்த போதுதான் இறந்தார்.
சுமன் – மனிதாபிமானமுள்ள மனிதர்
மம்முட்டி – நல்ல மனிதர். எனக்கு மிகவும் பிடிக்கும். முதலில் நான் அவரை பார்த்த போது நெகடிவாக உணர்ந்தேன். போகப் போக அப்படியில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.
மோகன்லால் – ஒரே வார்த்தைதான் ஸ்வீட் லாலேட்டன்
கமல்ஹாசன் – நான் பார்த்த வகையில் மிக நல்ல மனிதர்
சத்தியராஜ் – நல்ல நண்பர்
விஜயகாந்த்- அவரை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
ரஜினிகாந்த் – நண்பர், அவரின் சிரிப்பு ரொம்ப பிடிக்கும்.
நடிகை அம்பிகா தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது, டி.வி சீரியல்களில் நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஸ்ருதி வாழ்க்கையில் விளையாடும் எமன்… நிலச்சரிவில் குடும்பமே பலி… விபத்தில் வருங்கால கணவரும் இறப்பு!
விலை குறைந்த தங்கம்.. வாங்குவதற்கு சரியான நேரம்!