அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’. இந்த படத்தின் நாயகனாக அறிமுக நடிகர் பவன்.கே நடித்திருக்கிறார். நடிகர் சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மேகனா எலன், இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி உட்பட பலர் நடித்துள்ளனர். லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது.
திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கிராமத்தில் உள்ள கட்டுப்பாடுகளை ஒருவன் மீறும்போது நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
இன்று (ஜனவரி 22) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத சமூகத்தை சிறைக் கம்பிகளுக்கு முன் நின்று, கவனிக்கும் விதமாக அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அயோத்தியில் நிறுவப்பட்ட பால ராமர் சிலை: சிறப்பம்சங்கள் என்ன?
கோவிலுக்குள் அனுமதி மறுப்பு: தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி