அமரன் ரிலீஸ்: சிவகார்த்திகேயனின் தீபாவளி ட்ரீட்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகிறது.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி காம்போவை அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படக்குழு அமரன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல் சிங் மற்றும் ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

எம்.ஆர்.விக்கு உடந்தை… இன்ஸ்பெக்டருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு உறுதியளித்த ராம்தாஸ் அத்வாலே

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts