ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிச்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமரன் படத்தை தயாரித்துள்ளார்.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அமரன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் இதுவரை இந்த படத்தின் ஹீரோயின் சாய் பல்லவி லுக் குறித்து எந்த புகைப்படமும் வெளியாகாமல் இருந்த நிலையில்
இன்று (மே 9) சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு சாய் பல்லவியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரு பஸ் பயணத்தில், ஜன்னல் ஓரமாக அமர்ந்து பனிமலைகளை மகிழ்ச்சியுடன் ரசிப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கூடிய விரைவில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரியானா பாஜக ஆட்சிக்கு ஆபத்தா? – ஓரணியில் எதிர்க்கட்சிகள்… தடுமாறும் பாஜக!
4 ஆண்டுகள் விவேக்குடன் பேசாத சுந்தர்.சி – காரணம் தெரியுமா?
விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!
ஆகஸ்ட் 15க்குள் 30 லட்சம் வேலைகள்… இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்த ராகுல்