ஓணம் கொண்டாட்டம் : குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

சினிமா

கேரளத்தை சேர்ந்த நடிகை அமலாபால் ஓணம் திருநாளில் தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமலா பால். விஜய், விக்ரம், தனுஷ் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன்  நடித்து பெயர் பெற்றார்.

சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் ஏ எல் விஜய்யை காதல்  திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இருவரும் சில வருடங்களில் பிரிந்தனர். அதற்கு பிறகு அமலா பால் யோகா மற்றும் டிராவல்லிங்கில் ஈடுபட்டார்.

சில மாதங்களுக்கு  முன், தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார்.  அமலாபாலின் கணவர் குஜராத்தை சேர்ந்தவர். சுற்றுலா துறையில் உள்ளார். இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

அமலா பால் நிறைமாதத்துடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிடப்பட்டது.  தொடர்ந்து,  நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் மாதம் குழந்தை பிறந்தது.

தன்னுடைய ஆண் குழந்தைக்கு அமலா பால்  இலை என பெயர் சூட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  நேற்று ஓணம் பண்டிகையில் போது, குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்டுள்ளார் அமலாபால், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் வெள்ளை நிற முண்டு சிவப்பு வர்ண பார்டர் மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து காணப்படுகிறார். குழந்தைக்கும் சிவப்பு , வெள்ளை கலந்த முண்டு கட்டப்பட்டுள்ளது.

அமலாபாலின் முதல் திருமண வாழ்க்கை மனக்கசப்பில் முடிந்தாலும் இரண்டாவது திருமணம் அவருக்கு நல்ல மண  வாழ்க்கையை கொடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மதிப்புமிக்க இந்திய வீரர்: அதிர்ச்சியில் கோலி, ரோகித் ரசிகர்கள்!

நடிகைகள் குறித்து அவதூறு: டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
4
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *