அமலாபால் பிறந்தநாளில் அவரது நண்பர் ஜகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்திய க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமாகி 15 வருடங்களை நெருங்கியுள்ள நடிகை அமலாபால் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
மைனா, தெய்வதிருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், ஆடை என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவரும் அடுத்த மூன்று ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் மீது பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்தன. இந்த நிலையில் அவரது காதல் குறித்து இன்று அவரது பிறந்தநாளில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அவரது காதலர் ஜகத் தேசாய் தனது காதலை தெரிவித்தார். அவருக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமலா பால், அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜகத், ”எனது ஜிப்சி ராணி ஓகே சொல்லிவிட்டாள். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே” என்று குறிப்பிட்டுள்ளார்.
Here’s wishing @Amala_ams a happy birthday 🎂❤️🎉.. as she gets ready to marry soon 🤩 #weddingbells
“my gypsy queen said yes” captions #JagatDesai as he posts a cute video of him proposing and getting engaged 💍 #amalapaul pic.twitter.com/ZW1UtwReWz— sridevi sreedhar (@sridevisreedhar) October 26, 2023
அந்த வீடியோ அமலா பால் சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ள நிலையில், அவருக்கு பிறந்த நாளுடன், திருமணத்திற்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!
கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்?
அதெப்படி 🐋 எத்தனை கல்யாணம் பன்னாலும் மொதோ கல்யாணம் மாதிரியே பீல் வுடுறாங்க…நடிகைங்க…மட்டும்…😏