புஷ்பா திரைப்படத்திற்கு அறிமுகம் தேவை இல்லை. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’.
பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகி இது ரூபாய் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் போன்ற பலர் பணியாற்றி இருந்தனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் காம்போ மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று படத்தின் டிரைலர் வெளியானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் புஷ்பா 2 வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை புஷ்பா 2 செய்துள்ளது. புஷ்பா 2 படத்தின் ஹிந்தி தியேட்டர் உரிமை 200 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
அதோடு படத்தின் ஓடிடி உரிமை ரூபாய் 175 கோடிக்கு நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு, விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் மே மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் புஷ்பா 2 படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். வைரலாகும் இந்த செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
தமிழைப் பொறுத்தவரை மே 3-ம் தேதி அரண்மனை 4 படம் வெளியாகிறது. மேலும் 10-ம் தேதி கவின் நடிக்கும் ‘ஸ்டார்’, சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முஸ்லிம், இந்து வார்த்தைகள் எங்கே இருக்கிறது? மோடியிடம் விவாதிக்க நேரம் கேட்ட காங்கிரஸ்!
#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… ‘என்னமோ ஏதோ’ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!
புதிய பிசினஸ் ஆரம்பித்த ‘அயலி’ நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்…!