பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஏற்கனவே ‘ஆர்யா – 2’, ‘ரேஸ் குரம்’ போன்ற படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உண்டு. அங்கே அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பதைக் காண முடியும். இந்த நிலையில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா – 2’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகரானார் அல்லு அர்ஜுன்.
அந்தப்படத்தின் அபார வெற்றியையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா – 2’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான டீசர், பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ‘புஷ்பா’ திரைப்படம் செய்த வசூல் சாதனையை விட பல மடங்கு சாதனையை ‘புஷ்பா – 2’ படைக்கும் என்பது சினிமாத் துறையினரின் கருத்தாக உள்ளது.
வருகிற டிச.5ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு சுமார் ரூ.300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் அல்லு அர்ஜுன். இதன் மூலம் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகிறார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 69’ படத்திற்காக ரூ.275 கோடி ரூபாய் சம்பளத்தை விஜய் வாங்கியதன் மூலம் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை அல்லு அர்ஜுன் பிடித்துள்ளார்.
– ஷா