அல்லு அர்ஜுன் கைது… அழுத மனைவி ; போலீசார் முன்னிலையில் என்ன செய்தார் தெரியுமா?

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் சந்தியா தியேட்டரில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனை அந்த மாநில போலீஸார், ,இன்று (டிசம்பர் 13 ) காலை கைது செய்து சிக்கட்டப்பல்லி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். திடீரென்று தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் தன் பாதுகாவலர்களுடன் படம் பார்க்க சென்றதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தது என்று போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் அதிபர் சந்தீப், சீனியர் மேலாளர் நாகராஜு உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் நடிகைகளை காண கூட்டம் கூடும் போது , இத்தகைய பதற்றமான சூழல் ஏற்படுவது என்பது வழக்கமாக இருக்கும்பட்சத்தில், அல்லு அர்ஜூனின் கைது நடவடிக்கை பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட போது போலீசார் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புஷ்பா நடிகரை படுக்கை அறையில் இருந்து நேரடியாக கூட்டிக் கொண்டு வந்துள்ளனர். ஆடை கூட மாற்ற விடவில்லை. போலீசாரிடம் காலை உணவு சாப்பிட்டு விட்டு வந்து விடுவதாக கேட்ட போது , அதற்கு அனுமதிக்கவில்லை என்று அவர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்து விட்டு தெலுங்கு பட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் அல்லு அர்ஜுன் மனைவி ஸ்னேஹா ரெட்டி அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் ஆகியோரும் இருக்கின்றனர். வீடியோவில் அல்லுஅர்ஜுன் மனைவி அழுவதையும் காண முடிகிறது. அவரை முகத்தை வருடி கொடுத்து புஷ்பா ஹீரோ ஆறுதல் கூறினார். பின்னர், மனைவிக்கு முத்தம் கொடுத்து விட்டு போலீசாருடன் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கூட்ட நெரிசலில் பலியான அந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிதியுதவி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

‘சீனாக்காரி மாதிரிலா இருக்குறாப்ல’ – வருஷம் 16 படத்தில் அறிமுகமான குஷ்பூ பற்றி வந்த கமெண்ட்!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு: சென்னை மக்களுக்கு அலர்ட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts