நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
இங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தில் இன்று (மே 10) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. மே 13-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், நந்தியால் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தனது நண்பருமான சில்பா ரவி சந்திர கிஷோர் ரெட்டியை ஆதரித்து நடிகர் அல்லு அர்ஜூன் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது, தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
Grateful to the people of Nandyal for the warm reception. Thank you, @SilpaRaviReddy garu, for the hospitality. Wishing you the very best in the elections and beyond. You have my unwavering love and support pic.twitter.com/n34ra9qpMO
— Allu Arjun (@alluarjun) May 11, 2024
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அல்லு அர்ஜூன், “நந்தியால் தொகுதி மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. ரவி சந்திர கிஷோர் ரெட்டியின் அன்பு மிகுந்த உபசரிப்புக்கு நன்றி. தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். என்னுடைய அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், ஜனசேனா கட்சியின் தலைவரும், தனது மாமாவுமான பவன் கல்யாணை ஆதரித்து நடிகர் ராம் சரண் இன்று பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து ஆயிரக்கணக்கான ராம் சரண் ரசிகர்கள் திரண்டனர். அவர்களை பார்த்து கை அசைத்து தனது அன்பை பகிர்ந்த ராம் சரண், தனது மாமா பவன் கல்யாணுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆந்திராவில் ஒரே நாளில் இரண்டு முக்கிய நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…