நடிகை ஆலியா பட் ‘Ed Finds A Home’ என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகை ஆலியா பட். ராசி, கல்லி பாய், கங்குபாய் கதிவாடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
நடிகை, பாடகி என பன்முக தன்மை கொண்ட ஆலியா பட், தற்போது எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார். ‘Ed Finds A Home’ என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை ஆலியா பட் எழுதியுள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற சிறார் இலக்கிய திருவிழாவில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாய் சோனி ரஸ்தான், சகோதரி ஷாகீன் பத் ஆகியோருடன் ஆலியா பட் கலந்து கொண்டார். புத்தக வெளியீட்டு விழாவிற்கு பின்னர் தனது ரசிகர்களுடன் உரையாடிய ஆலியா, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
இதுதொடர்பாக ஆலியா பட் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு புதிய சாகச பயணம் தொடங்குகிறது. எனது குழந்தைப்பருவம் கதைகளாலும் கதைசொல்லிகளாலும் நிரம்பியிருந்தது.
எனக்கு சொல்லப்பட்ட கதைகளை குழந்தைகளுக்கான புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. நீங்கள் இந்த புத்தகத்தை ஆன்லைனிலும், புத்தக கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆலியா பட் புத்தகம் எழுதியிருப்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாஞ்சோலை… மறக்க முடியாத வரலாறு : திக்கற்று நிற்கும் தொழிலாளர்களை திரும்பி பார்க்குமா அரசு ?
காதை பிளந்த அலறல் சத்தம்… தண்டவாளத்தில் சடலம்: ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் திக் திக்!