அலை பாயுதே படம் 2000 ஆம் ஆண்டு வெளி வந்தது. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ஹிட் அடித்தது. இளம் டாக்டரான சக்திக்கும் சாப்ட்வேர் இன்ஜீனியரான கார்த்திக்குக்கும் இடையே மலரும் காதலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.
ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம் செய்திருக்க ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அலை பாயுதே படம் இளம் வயதினரை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில், நடிகை ஷாலினி நடிகர் மாதவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்றென்றும் புன்னகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, பலரும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு சக்தியும் கார்த்திக்கும் மீண்டும் இணைந்துள்ளனர் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், அலைபாயுதே படம் வெளி வந்து 24 ஆண்டுகள் ஆகி விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அலைபாயுதே ரீ யூனியன். எனக்கு பிடித்த ஜோடி. இப்பவும் இளம் ஜோடி போலவே காட்சியளிக்கின்றனர் . அலைபாயுதே பார்ட் 2 எடுக்கலாம் போல தெரிகிறதே என்றும் கமெண்டில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
அலைபாயுதே திரைப்படம் இன்றைய இளைஞர்களுக்கும், காதலர்களுக்கும் பிடித்த படமாகவே பார்க்கப்படுகிறது . அமர்க்களம் படத்தின் போது நடிகர் அஜித்தை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் . திருமணத்திற்கு பின்பு நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திய ஷாலினி தற்போது குழந்தைகள், கணவர் என வாழ்ந்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்