அக்க்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மியின் செல்பி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
குட் நியூஸ் புகழ் ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டிரைலரில் அக்க்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடப்பது போன்று உள்ளது. இந்திய வரைபடத்தை அக்க்ஷய் குமார் அவமதித்ததாக இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தனது வட அமெரிக்க சுற்றுப்பயணத்தை விளம்பரப்படுத்த வீடியோவை வெளியிட்டு இருந்தார் அக்க்ஷய் குமார். அவருடன் இந்த வீடியோவில் திஷா பதானி, நோரா பதேஹி, மவுனி ராய் மற்றும் சோனம் பஜ்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வீடியோவில் அனைத்து பிரபலங்களும் பூகோள பந்தின் மேல் நடந்து செல்வது போல் வீடியோ காட்டுகிறது.
உலகின் மற்ற நாடுகளின் வரைபடத்தில் மற்ற பிரபலங்கள் காலடி எடுத்து வைக்கும் போது, அக்க்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் அடியெடுத்து வைக்கிறார். வீடியோ பகிரப்பட்ட உடனேயே, அக்க்ஷய் குமாருக்கு எதிராக விமர்சனங்களும் டிரோல்களும் குவிந்து வருகின்றன.
–இராமானுஜம்
இடைத்தேர்தல்: தென்னரசு வேட்புமனு தாக்கல்!
ஒரே அணி… ஓபிஎஸுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை