இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் நடித்த செல்ஃபி ராஜ் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.6 கோடி மட்டுமே வசூல் செய்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள திரைப்பட இயக்குநர் ஜீன் பால் லால் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம் ‘ட்ரைவிங் லைசன்ஸ்’.
மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் தான் பிப்ரவரி 24 அன்று அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் வெளியான ‘செல்ஃபி ராஜ்’ படம்.
இரண்டு நாட்களில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே மொத்த வசூலாக பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு திரையரங்குகளில் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடி மட்டுமே வசூலானது, அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வந்த இந்தி சினிமாவில் ‘பதான்’ படத்தின் வெற்றி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஷாருக்கானுக்கு அடுத்தநிலையில் உள்ள அக்க்ஷய்குமார் நடிப்பில் வெளியாகும் செல்ஃபிராஜ் வெற்றி பாதையை முன்னெடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் முதல் நாள் வசூல் மீண்டும் இந்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படம் வெளியான இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தமாக படம் இதுவரை ரூ.6 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அக்ஷய் குமார் படங்களில் மிகவும் குறைவாக முதல் நாள் வசூலை ஈட்டிய படமாக செல்ஃபி ‘இடம்பிடித்துள்ளது.
2021-ல் அவரது நடிப்பில் வெளியான’ படம் கூட ரூ.2.75 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘செல்ஃபி’ அவரது படங்களிலேயே குறைந்த ஓப்பனிங் வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இராமானுஜம்
ஒரு ஓட்டுக்கு 18 பரிசுகள்: கட்டுக்கடங்காத ஈரோடு தேர்தல் அட்டகாசம்!