ஜெயம் ரவியின் அகிலன்: ஹிட்டடிக்குமா?…படக்குழுவினர் சொல்வது என்ன?

சினிமா

ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்திற்கு பின் இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் “அகிலன்”.

இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம்  தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று திரைக்கு வரவுள்ள அகிலன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. 

தயாரிப்பாளர் சுந்தர் பேசும்போது, “இந்தப் படத்தை உருவாக்குவது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஏனென்றால் படப்பிடிப்பு முழுக்க துறைமுகத்தில் நடைபெற்றது. சில கப்பல்கள் வருவதற்கும் சில கப்பல்கள் செல்வதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனாலும் படக்குழு இவை எல்லாவற்றையும் சமாளித்து,  படத்தை எடுத்துள்ளனர்.

படத்தில் ஸ்டண்ட் குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஒரு காட்சியில் சென்று கொண்டிருக்கும் படகில் ஏற வேண்டியிருந்தது. டூப் போட்டு எடுத்துக் கொள்வோம் என்று சொன்னேன். ஆனால் ரவி சார் வேண்டாம் என்று சொன்னார். இது போன்று பல இடங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

பிரியா காக்கி சட்டையில் கலக்கியுள்ளார், தான்யா ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையை பற்றி நான் சொல்லத் தேவையில்லை.  படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.” என்றார். 

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது, “ஒரு படத்திற்கு கதைக்களம் மிக முக்கியம். கதை நடக்கும் இடம் படத்தின் தன்மையை மாற்றும். இந்தப்படத்தில் ஹார்பரில் நாம் பார்க்காத ஒரு வாழ்கையை, ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளார்கள். கல்யாண் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார். பாடல்கள் பற்றி விவரிக்கும் போது கூட இந்த ராகத்தில் போடலாம் என்பார். எனக்கு ராகம், இசை எல்லாம் தெரியாது இப்போது தான் கற்றுக்கொள்கிறேன். ஆனால் இசையை எனக்கு பிடித்த வேலையாக விரும்பி செய்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது.” என்றார்.

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் பேசியதாவது, “இந்த படம் துறைமுகத்தில் நடப்பவைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனைவருக்கும் இது புதிதாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் அப்படி இல்லை, என்னை சுற்றியுள்ள நிறைய நண்பர்கள் துறைமுகத்தை சுற்றித்தான் இருக்கிறார்கள். அவர்கள் எளிய மக்கள் தான், எனவே படம் பார்க்கும் அனைவரும் தங்களுடன் எளிதாக தொடர்புபடுத்தி கொள்ளும் ஒரு எளிமையான வாழ்வை சொல்லும் வண்ணம் தான் இப்படம் இருக்கும்.

Akilan Movie Press Meet

இப்படத்தை ஜெயம் ரவி தன்னுடைய நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். எல்லா படங்களுக்கும் கேப்டன் இயக்குநர் என்றுதான் கூறுவார்கள் ஆனால் இந்தப் படத்தின் கேப்டன் எங்கள் தயாரிப்பாளர் சுந்தர் தான். என் அனுபவத்தில் நிறைய தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன். ஆனால் சுந்தர் அளித்த ஆதரவு நம்ப முடியாத ஒன்று. நான் இதனை கூறுவதற்கான காரணங்கள் நீங்கள் படத்தை பார்த்த பிறகுதான் தெரியும். 

அதன் பிறகு ஜெயம் ரவி சார், என்னுடைய திரைப்பயணம் என்பது ரவி சாரை சுற்றியே அமைந்துள்ளது. பேராண்மை முதல் இன்று வரை நாங்கள் ஒன்றாய் பணிபுரிந்துள்ளோம்.  பேராண்மையில் திரைக்கதை, பின் பூலோகம், இப்போது அகிலன், இந்த மூன்று படங்களும் பெரிய கருத்துகளை கொண்ட படம் இந்த மூன்று படங்களிலும் எனக்கு ரவி சாருடன் கிடைத்த அனுபவம் மிகவும் பெரியது ,

நடிகர் ஜெயம் ரவி, “20 வருட திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாராட்டு நிறைய கிடைத்துள்ளது. எப்போதும் நண்பர்களாக இருக்கலாம் என ஆசைப்படுகிறேன். மேக்கிங் பொறுத்தவரை அகிலன் ரொம்ப கஷ்டமான படம். இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது, தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது.

இந்த படத்தை சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. பாபி மாஸ்டர் பேராண்மையிலிருந்து தெரியும். இயக்குநருடன் இணைந்து பயணித்துள்ளார். விவேக், பி.சி. ஶ்ரீராம் சாரின் செல்லப்பிள்ளை, அயராத உழைப்பாளி, என் அடுத்த படத்திலும் அவர் தான் ஒர்க் பண்ணுகிறார். சிராக் என் பிரதர், அவருக்கு வாழ்த்துகள். பிரியா தமிழ் பேசி நடிக்கும் ஹீரோயின், ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார், வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் சுந்தர் சார் சகோதரர் மாதிரி தான், நிறைய படங்கள் சேர்ந்து பயணிக்க போகிறோம். இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும்.

இந்தப்படம் நல்லா வந்ததற்கு காரணம் அவருடைய டீம் தான். தான்யா இந்தப்படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருப்பார். சாம் CS அட்டகாசமான இசையை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இராமானுஜம்

ஏப்ரல் 1 முதல் ஹால்மார்க் இல்லாத நகைகள் விற்க தடை!

ரஷ்யாவின்  தற்கொலைப்படை தாக்குதல்… உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா: முடிவு என்ன?

சென்னையில் விரைவில் தனியார் பேருந்துகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *