அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படம் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை அடுத்து அவர் மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK63 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த தகவலை அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் உறுதி செய்துள்ளார். அதோடு ஆதிக் ரவிச்சந்திரனும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ப்ரோபைல் புகைப்படமாக அஜித் கண்ணை வைத்திருக்கிறார். இந்த நிலையில் அஜித் அடுத்ததாக தன்னுடைய AK64 படத்துக்காக வெற்றிமாறனுடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அஜித்-வெற்றிமாறன் முதன்முதலாக கைகோர்க்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது விடுதலை 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில், மும்முரமாக இருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இதற்கு பின்னர் தான் அஜித் படத்தை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. அதோடு நீண்ட இடைவெளிக்கு பின் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் AK65 படத்தில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆதிக், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் என அடுத்தடுத்த லைன் அப்களை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது கூடுதல் உற்சாகத்துடன், சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு!