விடாமுயற்சி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தபு நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. சமீபத்திய தகவலின்படி முதற்கட்ட படப்பிடிப்பு லண்டன் மற்றும் பாங்காக்கில் நடைபெற உள்ளதாம்.
இந்த நிலையில் ‘AK 63’படமானது ஆக்ஷன் மற்றும் எக்ஸ்பெரிமெண்ட் அடிப்படையில் இருக்கும் என கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்திற்கு பின்னர் முழுக்கவே ஆக்ஷன் பக்கம் அஜித்தின் கவனம் திரும்பி இருக்கிறது.
அதனடிப்படையில் இந்த படத்திலும் ஆக்ஷனிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாம். முதலில் கிராமத்து பின்னணியை அடிப்படையாக கொண்ட கதை என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆக்ஷன் படம் என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அடல்ட் காமெடி, கிராமத்து கதை, திரில்லர், மற்றும் நகைச்சுவையை அடிப்படையாக வைத்துத்தான் ஆதிக் இதுவரை படங்களை இயக்கி இருக்கிறார்.
இதனால் முழுக்க ஒரு ஆக்ஷன் படத்தை அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஆதிக் அளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்றாலும் அஜித்தின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் காலத்திற்கும் மறக்க முடியாத படமாக இருக்கும் வகையில் ஆதிக் இப்படத்தின் காட்சிகளை பார்த்துப்பார்த்து செதுக்கி வருவதாக கூறப்படுகிறது.
எனவே அஜித்தை, ஆதிக் திரையில் எப்படி காட்டப்போகிறார்? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு!