அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
அவரது 63-வது படமாக உருவாகும் இப்படத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-தபு இணைந்து நடிக்க இருக்கின்றனர்.அதோடு ‘வீரம்’ படத்திற்குப் பின்னர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்றும், 2௦25-ம் ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது எஸ்.ஜே.சூர்யா, அரவிந்த் சாமி ஆகியோரிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
அதோடு தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவரிடமும் வில்லன் வேடத்துக்கு பேசி வருகின்றனராம். மூவரில் யார் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
என்றாலும் எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்திருப்பதால் இந்த படத்திலும் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
படத்தின் கதையை 80-களின் கிராமத்து பின்னணியில் நடப்பது போல, ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி இருக்கிறாராம்.
எனவே இந்த பின்னணிக்கு அரவிந்த் சாமியை விட எஸ்.ஜே.சூர்யா பொருத்தமாக இருப்பார் என்பதால் வில்லன் வேடத்தில், அவர் நடித்திடவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. என்றாலும் வழக்கம்போல நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கோயில் கட்டினால் அவர் பக்கம் போய்விடுவார்களா?” : எடப்பாடி விமர்சனம்!
கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!