AK 63: ‘கொல மாஸ்’ 22 ஆண்டுகளுக்கு பிறகு… அஜித் செய்த சம்பவம்!

Published On:

| By Manjula

ajith's ak 63 title revealed

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும், புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. என்றாலும் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எந்த ஒரு அப்டேட்டினையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

ரசிகர்களும் லைகா நிறுவனத்திடம் அப்டேட் கேட்டுக்கேட்டு அலுத்துப்போய் விட்டனர். ஆனால் அவர்களுக்கு தற்போது அஜித் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் அளித்திருக்கிறார். ajith’s ak 63 title revealed

ajith's ak 63 title revealed

அதன்படி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரின் 63-வது படத்திற்கான டைட்டில் போஸ்டரை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளது. ajith’s ak 63 title revealed

பான் இந்தியா படமாக மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘Good Bad Ugly’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

வருகின்ற 2௦25 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் நடிக-நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2௦௦2-ம் ஆண்டில் வெளியான அஜித்தின் படத்திற்கு ‘வில்லன்’ என ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

ajith's ak 63 title revealed

அதற்குப்பிறகு அவரின் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எதுவும் வைக்கப்படவில்லை. தற்போது 22 வருடம் கழித்து இந்த படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளனர்.

பான் இந்தியா படமென்பதால் அனைவருக்கும் கனெக்ட் ஆகும்விதமாக, இப்படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ajith's ak 63 title revealed

இடையில் அஜித்திற்கு சின்னதாக ஒரு அறுவைசிகிச்சை நடந்தது. அதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்தனர்.

ஆனால் ரசிகர்களின் வருத்தத்தினை போக்கும்விதமாக, தற்போது தன்னுடைய புதிய படத்தின் டைட்டிலை அஜித் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து அவரது ரசிகர்கள் ‘AK 63’ டைட்டில்  அப்டேட்டினை சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொளுத்தி வருகின்றனர். இதனால் தற்போது இந்தியளவில் படத்தின் டைட்டில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அஜித்தின் பேவரைட் தினமான வியாழக்கிழமை தினத்திலேயே, அவரது 63-வது படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போதைப்பொருள் விவகாரம்… எடப்பாடி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்த திமுக!

Lokesh Kanagaraj: ‘ரியல் வெறித்தனம்’ டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் லோகேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment