ஒருவழியாக முடிந்த அஜித்தின் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு : வீடியோ வைரல்!

சினிமா

லைகா புரடக்க்ஷன் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் அஜர்பைஜானில் தொடங்கியது. லைகா அஜிக்குமாருக்கு ஒப்புக் கொண்ட அடிப்படையில் சம்பளத்தை கொடுக்காமல் தாமதிப்படுத்து வருவதால் படப்பிடிப்புக்கு தொடர்ந்து கால்ஷீட் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

அத்துடன் திட்டமிட்ட பட்ஜெட்டை காட்டிலும் கூடுதல் செலவு படப்பிடிப்புக்கு ஏற்பட்டது இதன் காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா என்கிற சந்தேகம் ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்த சூழலில் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜீத்குமார் நடிக்க தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இதற்கிடையில் விடாமுயற்சி படத்தை முடித்தாக வேண்டிய நெருக்கடி லைகா நிறுவனத்திற்கு அப்படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்கிய ஓடிடி நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால் ஏற்பட்டது.

கிடப்பில் போடப்பட்ட விடாமுயற்சி தூசி தட்டப்பட்டு  கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில்  படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. இதில் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய காட்சிகள் படம் ஆக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருமாத காலத்திற்கு மேலாக அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக லைகா நிறுவனம் X தளத்தில்  புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் நடிகர் அஜித் குமார் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் அஜர்பைஜானில் உள்ள பாகுவின் முடிவற்ற நிலப்பரப்புகளில் “விடாமுயற்சி” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என லைகா நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடன் விலகல்… கமலா ஹாரிஸுக்கு சிக்கல்!

5,146 தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்: அரசாணை வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *