அஜித்தின் “விடாமுயற்சி” ஷூட்டிங் தொடங்கியது!

Published On:

| By Monisha

Ajith VidaaMuyarchi Movie Update

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும், அந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த ப்ராஜெக்டிலிருந்து விலகுவதாக கூறப்பட்டது.

அதன் பிறகு லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் “விடாமுயற்சி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும், அடுத்த அப்டேட் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடிகர் அஜித்குமார் பைக் டிராவல் செய்ய தொடங்கி விட்டதால் விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இயக்குனர் மகிழ் திருமேனியும் படத்தை பற்றி எதுவும் கூறாமல் அமைதி காத்து வந்தார்.

ஒரு பக்கம் விஜய்யின் லியோ படத்தின் அப்டேட்ஸ், ரஜினிகாந்தின் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 அப்டேட்ஸ், சூர்யாவின் கங்குவா பட Glimpses வீடியோ என,

மற்ற ஹீரோக்களின் படங்கள் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருந்த நிலையில் நடிகர் அஜித் குமார் பைக் டிராவலில் பிஸியாக இருந்ததால் நெட்டிசன்களின் மீம் மெட்டீரியலாக மாறிவிட்டது விடாமுயற்சி.

இந்நிலையில் தற்போது ஒரு வழியாக விடாமுயற்சியின் படப்பிடிப்பு அக். 4ஆம் தேதி  அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விட்டதாம்.

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார். விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள த்ரிஷாவும் அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார்.

மேலும் விடாமுயற்சி படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பதாக சில தகவல்கள் வெளியானது. தற்போது அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் பிரியா பவானி சங்கரும் அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார்.

விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு வில்லனாக சஞ்சய் தத் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அர்ஜுன் தாஸுக்கு பதிலாக பிக் பாஸ் ஆரவ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அஜித், த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகளும், அஜித் வில்லனுடன் மோதும் சண்டை காட்சிகளும் அஜர்பைஜானில் படம் பிடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல மாதங்கள் காத்திருப்பிற்கு பிறகு விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விடாமுயற்சியுடன் காத்திருந்தால் தான் “விடாமுயற்சி” படத்தின் அப்டேட்ஸ் கிடைக்கும் போல…

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவி நிற வந்தே பாரத் – காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel