நடிகர் அஜித் குமார் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. ajith’s ‘vidaamuyarchi’ release
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் குமாரின் திரைப்படம் திரைக்கு வருவதால், விடா முயற்சி’ படத்தின் மீதான எதிர்பார்ப்புஅதிகமாக இருந்தது. டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று விடாமுயற்சி படம் வெளியானது.
தமிழ்நாடு அரசு இன்று காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனால், காலை முதலே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் அஜித் குமார் ரசிகர்கள் பட்டாசு வெடித்து விடா முயற்சி படத்தை கொண்டாடினர்.
இந்தக் கதை ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சிக்கும் அந்த ஹாலிவுட் படத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்கள். மாஸ் என்ட்ரி, செம இடைவேளை காட்சிகள் படத்தை அமர்க்களப்படுத்தியுள்ளது. ஹீரோவின் பஞ்ச் டயலாக் என்று எதுவுமே இல்லை. உண்மையை சொல்லப் போனால், வெறும் கதையை மட்டும் நம்பி இந்த படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.
அஜித்குமார் பத்மபூசன் விருது பெற்ற பிறகு, வெளியான முதல் படம் விடா முயற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் மட்டும் 40 கோடியை இந்த படம் வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ajith’s ‘vidaamuyarchi’ release