நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகர் அஜித் உடன் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமார் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், அஜித் சக நடிகர்களை எடுத்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்திற்காக ஒரு கார் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் அஜித்தும் நடிகர் ஆரவ்வும் இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட விபத்து வீடியோவை படக் குழு வெளியிட்டு அதுவும் வைரலானது.
விடாமுயற்சி படத்தின் சட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகிய இரண்டையும் சேர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விடாமுயற்சியின் படப்பிடிப்பு திடீரென பின்னடைவை சந்தித்துள்ளது.
ஜூன் மாதம் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகர் அஜித் தனது அடுத்த படமான “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கி விட்டார்.
விடாமுயற்சி படத்திற்கு என்ன ஆனது என ரசிகர்கள் அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் குறித்த ஒரு அப்டேட் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அது என்னவென்றால், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வேதாளம் திரைப்படத்தில் “ஆலுமா டோலுமா” என்ற ஒரு குத்து பாடல் அனிருத் இசையில் இடம் பெற்றிருந்தது.
தற்போது அதே Vibe-ல் விடாமுயற்சி படத்திற்காக ஒரு சூப்பர் குத்து பாடலை அனிருத் உருவாக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்திற்கு அனிருத்தின் இசை மிக பெரிய பலமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஆலுமா டோலுமா பாடலில் அஜித்தின் ஸ்டைலான டான்ஸை பார்த்து ரசித்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் அனிருத் இசைக்கு அஜித்தின் டான்ஸை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!
குட் பேட் அக்லி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே இத்தனை கோடி வியாபாரம்?
KKR vs SRH: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா